Monday, July 6, 2009

அடிக்க ல் நா ட் டு வி ழா வி ல் ஓம்ஸ் தியாகராஜன்

உலகமே கல்வியின் முக்கியத்துவத் தையும் அதற்கேற்ற விப்புணர்வையும் பெற்றிருக்கும் இன்றைய சூழலில், தமிழ்க்கல்வி மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலத்திற்கும் மேம்பாட்டிற்கும் வித்திடும் வகையில், பிறமொப் பள்ளிகளைப் போல் நமது தமிழ்ப்பள்ளி களிலும் அதனை என்றும் காக்கக் கூடிய பள்ளி வாரியம் அமைக்கப் பட வேண்டும் என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.

2008 அக்டோபர்த் திங்களில் கிள்ளான், ஐலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகை யில் அவர் இதனை வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் மேம் பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் இத்தகைய பள்ளி வாரியம் அமைக்கப் படுவது மிகவும் அவசியமானதும் பொருத்த மானதும் ஆகும். பள்ளிக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் கவனிக்க பள்ளி வாரியம் அமைக்கப்படுமானால் பள்ளிகளின் தோற்ற நிலை, அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சினைகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம் களைய முடியும்.

ஒரு பள்ளியின் வளர்ச்சியிலும் தோற் றத்திலும் மேம்பாடு உருவாகுமானால் அப்பள்ளியின் கல்வி வளர்ச்சியும் அதற்கு ஈடாக முன்னேற்றமடையும் என்று பள்ளியின் வாரியக் காப்பாளருமான ஓம்ஸ் தியாகராஜன் கருத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய எம்.ஏ.பி. நிறுவன உரிமை யாளரும் பள்ளியின் வாரியத் தலைவரு மான பி.எஸ்.ராஜன் பேசுகையில், ஐலண்ட்ஸ் பள்ளி தொடக்க காலத்தில் 60 மாணவர் களைக் கொண்டிருந்தது. இன்று 800க்கும் மேற்பட்ட மாணவர் களைக் கொண்டிருப்ப தோடு அடுத்த ஆண்டுக்கு மேலும் 200 மாணவர்கள் பதிவில் உள்ளதால் பள்ளியில் வகுப்பறை கள் போதாத நிலையில் தான் இந்த இணைக் கட்டட முயற்சி தோன்றி யுள்ளதாக குறிப்பிட்டார்.

ஏறக்குறைய 6 லட்சம் வெள்ளி செலவில் உருவாகும் இந்த இணைக் கட்டடம் 6 வகுப்பறைகளைக் கொண்டு, 1,000 மாணவர்கள் பயிலும் பள்ளியாக எதிர்வரும் ஜனவரிக்குள் உருவாகும் என்றும் எதிர்காலத்தில் 1,500 மாணவர்கள் பயிலக்கூடிய துணைக் கட்டடங்களையும் சுற்றுச் சுவரையும் கொண்டு உருவாகும் திட்டமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அறிமுகவுரை ஆற்றிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.குமாரு, பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு மாணவரும் ஒரு பட்டதாரி என்ற நோக்கில் நாம் செயல் பட்டு ஐலண்ட்ஸ் பள்ளியை ஒரு சிறந்த பள்ளியாக உருவாக்க வேண்டும் என்றார்

ஒப்பற்ற தமிழர ஓம்சு ப.தியாகராசன்

ஓம்சு தியாகராஜன் அவர்கள் எடுத்துக்காட்டான உயர்பண்பாளர்;
ஏற்றமிகு தொழில்முனைவோர்;வள்ளன்மைப் பண்புடன் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெருந்தகை;தமிழன் பிளவுபட்டுப் பூசல் செய்து வீழ்ச்சி காண்பதைத்
தடுத்து என்றென்றும் நலமெய்திட ஒரே வழிதான் உள்ளது.

இளையதலைமுறை நல்ல கல்விவாய்ப்புகளைப் பெற்று,மருத்துவம்,தொழில்நுட்பம்,பொறியியல்,கலையியல்கள் எனப் பல்வேறு அறிதுறைகளிலும் புலமை பெற்று,உலகளாவிய சாதனைகளைப் புரிவதே தமிழினம் தழைத்திடத் தக்கவழியாகும்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் காமராசரும் இந்த வழியைக் கொண்டுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்கள்.

அந்தப் பெரியோர்கள் காட்டிய வழியில் மலேசியத் தமிழ் இளைஞர்கள்
கல்வியில் சிறந்திடும் வண்ணம் பல்வேறு தமிழ்ப்பள்ளிகளுக்கும்
பொருளுதவியை நல்கிக் கல்வி சிறந்திடத் தக்க அடித்தளம்
அமைத்துவருபவர் ஓம்சு ப.தியாகராசன் அவர்களே.

அந்தச் சான்றோரின் பெருமையை எடுத்துரைத்தலை இவ்வலைப்பூ தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.